பிரபாகரனின் மயிர் பொன்சேக்காவின் கரங்களில்...! எப்படித்தான் அவர் கழற்றினாரோ? - மகிந்த யாப்பா
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா பிரபாகரனின் மயிரைப் பிடித்துக் கொண்டிருக்கின்றார் என விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன குறிப்பிடுகிறார்.
வெலிகமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“பிரபாகரனின் மயிரொன்றின் அளவிற்காவது எங்கள் ஜனாதிபதி பெறுமதியற்றவர் என பொன்சேக்கா சொல்கிறார். பிரபாகரனின் பெறுமதிமிக்க மயிரொன்று பொன்சேக்காவுக்குக் கிடைத்துள்ளது. இதை எவ்வாறு அவர் பிடிங்கினார் என்பதில் எனக்கு சந்தேகம் நிலவுகிறது.
இப்படிப்பட்டவர்கள்தான் எங்கள் நாட்டில் இருக்கிறார்கள். இவர்களால் எங்கள் நாட்டுக்கு நன்மை கிடைக்காமலில்லை. என்றாலும் பொறாமை, குரோதம், பொய் போன்றவற்றினால்தான் இந்நாட்டை அழித்தார்கள்.
பொன்சேக்காவின் கடும் விரோதத்தையே இது காட்டுகின்றது. அதனால் அவருக்கு பொறாமையும், குரோதமும் பெறுமதிமிக்கது. அதனால் எங்களுக்கு இதனை சும்மா விட்டுவிட முடியாது. விசேடமாக தெற்கைச் சேர்ந்த நாங்கள்தான் இந்நாட்டை பாதுகாக்க எப்பொழுதும் முன்னின்றோம். அதனால் நாங்கள் அதற்கு வலுசேர்ப்பவர்களாக இருக்க வேண்டும்.”
தென் மாகாண சபைக்காக ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து போட்டியிடுகின்ற வேட்பாளர், சூரியவெவ பிரதேச சபையின் தலைவர் சுஜித் முத்துகுமாரனவின் இல 267, லூனும, அம்பலந்தோட்டையில் அமைக்கப்பட்டுள்ள பிரதான தேர்தல் அலுவலகம் இன்று அதிகாலை 2 மணிக்கு நாசம் செய்யப்பட்டுள்ளது. அங்கே வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகைக்கு பாரிய சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள சுஜித் முத்துகுமாரனவின் மற்றும்பல தேர்தல் பிரச்சார அலுவலகங்களிலுள்ள பெயர்ப்பலகைகள் இன்று அதிகாலை நாசம் செய்யப்பட்டுள்ளன. இதுபற்றி அம்பலந்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
(கலைமகன் பைரூஸ்
0 comments :
Post a Comment