புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் பிளவு! பிரிட்டிஸ் தமிழர் பேரவை சர்வதேச தமிழர் பேரவையிலிருந்து பிரிந்தது!
ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத் தியில் பிளவு ஏற்பட்டுள்ளது. நிதி மோசடி தொடர்பில் ஏற் பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாகவே இவ்வாறான பிளவு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி பிரிட்டிஸ் தமிழர் பேரவை நேற்று சர்வதேச தமிழர் பேரவையிலிருந்து விலகியது.
இதனால் சர்வதேச தமிழர் பேரவையில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சர்வதேச தமிழர் பேரவைக்கு எவ்வித நிதியுதவியும் வழங்க வேண்டாமென பிரிட்டிஸ் தமிழர் பேரவை தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சர்வதேச தமிழர் பேரவையை இயக்குபவர்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிடாமை, அவ்வமைப்பு ஜனநாயக ரீதியில் செயல்படாமை, நிதிதொடர்பிலான விபரங்களை தெரிவிக்காமை உள்ளிட்ட முக்கிய காரணங்களை வைத்து பிரிட்டிஸ் தமிழர் பேரவை இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.
17 நாடுகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட சர்வதேச தமிழர் பேரவையில் தமது உறுப்பினர் ஒருவரை இடம்பெறச் செய்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக பிரிட்டிஸ் தமிழர்கள் பேரவை தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஐரோப்பாவின் 14 நாடுகளில் வசிக்கும் தமிழர் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் இவர்கள் எல்ரிரிஈ அமைப்பிற்கு ஆதரவு வழங்குவதை நிறுத்தியுள்ளதை அவதானிக்க முடிந்தது.
இதன் மூலம் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்படவுள்ள குற்றச்சாட்டுக்களில் பெரும்பாலனவற்றை முறியடிக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.இதன் மூலம் இலங்கையின் வெளிநாட்டு கொள்கை மேலும் பலமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment