கடந்த காலத்தைப் போன்று மீண்டும் யுத்த நிலைமையை ஏற்படுத்தாது நாட்டின் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம் என யாழ். வசாவிளானில் இன்று (04.01.2014) சனிக்கிழமை நண்பகல் 11.30 மணிக்கு நடைபெற்ற புதுவருட மற்றும் தனது பிரிவுபசார நிகழ்வில் உரையாற்றும் போதே யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் தமிழ் மக்களில் பெரும்பாலனவர்கள் இராணுவம் தமக்கெதிராக போராடியதாக நினைக்கின்றனர் ஆனால் இராணுவம் தமிழ் மக்கழுக்கு எதராக போராடியதில்லை என்பதுடன் இராணுவம் தமக்கு எதிரானவர்களுடன் மட்டும்தான் போரிட்டனர் எனக்குறிப்பிட்டார்.
எனினும் தற்போது யுத்தம் முடிந்த நிலையில் இராணுவம் பல அபிவிருத்தி வேலைகளை செய்து வருவதுடன் யுத்தத்தின் போது புதைக்கப்பட்ட மிதிவெடி அகற்றல், வசதிகுறைந்தவர்களின் மருத்தவ சிக்கிச்சைக்கு உதவுதல் மற்றும் மாதாந்தம் 200 இராணுவத்தினர் இரத்த தானம் போன்ற பல சமூக நல வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது என தெரிவித்தார்.
மேலும் நாமெல்லாம் ஒரே நாடு ஒரே மக்கள் எனவே இந்த நாட்டில் ஒற்றுமையுடன் வாழவேண்டும் கடந்த காலத்தை போல மீண்டுமொரு யுத்த காலத்தை ஏற்படுத்தக்கூடாது இதனை விட எந்தவொரு விடையத்தையும் தர்க்க ரீதியாக பேசி சாதக மாற்றி உங்கள் தேவைகளை பெற்று கொள்ள வேண்டும் என மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
இதே வேளை கடந்த 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் யாழ். கட்டளைத் தளபதியாக கடமையாற்றி வந்த ஹத்துருசிங்க, தற்போது கொழும்பு இராணுவ தலைமையகத்திற்கு எதிர்வரும் 6ஆம் திகதியுடன் மாற்றலாகி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment