Monday, January 6, 2014

எல்.ரி.ரி.ஈ யின் தாக்குதலிலுக்கு இலக்காகி நொருங்கிய விமானத்தில் இருவரை தவிர ஏனைய அனைவரும் தழிழர்கள்! பாகங்கள் காட்சிக்கு

ஏவுகணை தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதி தற்போது தடுப்புகாவலில் உள்ளார்.

இரணை தீவிற்கு அருகாமையிலுள்ள கடற்பரப்பில் எல். ரி.ரி.ஈ தாக்குதலில் நொருங்கி வீழந்த என்டெனோ 24 ரக வானூர்தியின் பாகங்கள் மற்றும் ஆடைகள், உடல் எச்ச ங்கள், பிரயாணிகளின் உரிமையாளர்களுக்கு காண்பிப்பதற் காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் மிலேச்சத்தமான செயற்பாடுகளை கண்டறிவதற்காக எதிர் வரும் 11 மற்றும் 12 ஆகிய தினங்களில் யாழ் நகரசபை விளையாட்டு மைதான த்திற்கு வருகை தருமாறு பொலிஸ் தலைமையகம் மக்களை கேட்டுள்ளது.

சகல சந்தர்ப்பங்களிலும் புலம் பெயர் தமிழ் அமைப்பு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது. எல்.ரி.ரி.ஈ விடுதலை இயக்கம் என்றும் இவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வானூர்தியில் வெளிநாட்டு விமானி மற்றும் ஒரேயொரு சிங்கள விமான சேவை ஊழியரை தவிர 48 பயணிகளும் தமிழ் மக்களாகும். இவர்களில் 8 சிறுவர்களும் அடங்குகின்றனர். இந்த வானூர்தி பலாலி யிலிருந்து புறப்பட்டது. விமானம் புறப்பட்டு 20 நிமிடங்களிற்குள் ஏவுகணை தாக்குதலில் இந்த விமானம் நொறுங்கி வீழ்ந்தது.

தமிழ் மக்களின் விடுதலை போராளிகள் என அடையாளப்படுத்திய எல்.ரி.ரி.ஈ இயக்கம் அப்பாவி தமிழ் மக்களை இலக்காக கொண்டு மேற்கொண்ட தாக்குதல்கள் அடையாளப்படுத்தியது.

இறந்தோரின் உறவினர்கள் இருப்பின் அவர்கள் பயணத்தை ஆரம்பிக்கும் போது அணந்திருந்த உடையினை அடையாளம் காண முடியுமாகவிருந்தால் அவர்களு க்கு தமது உறவுகள் நினைவுக்கு வரும். 70ற்கும் மேற்பட்ட ஆடைகளை நாம் மீட்டெடுத்துள்ளோம். நாம் இவை அனைத்தையும் எதிர்வரும் 11 மற்றும் 12ம் திகதிகளில் யாழ் நகர சபை மைதானத்தில் காடசிபடுத்தவுள்ளோம்.

இவற்றை அடையாளம் காண முடியுமாயிருப்பின், அடையாளம் காணும் உறவின ர்களை நாம் டி.என்.ஏ பரிசோதனைக்குட்படுத்தி அவர்களின் உறவுகளை அடை யாளங்காண நாம் நடவடிக்கை எடுப்போம். ஏவுகணை தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதி தற்போது தடுப்புகாவலில் உள்ளார். அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுத்தள்ளோம்.

No comments:

Post a Comment