Friday, January 17, 2014

வெள்ளநீரால் உடைக்கப்பட்ட மட்டு மாவடி ஓடை பாலம்!


மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் அடை மழையினால் உன்னிச்சை மற்றும் உறுகாமம் ஆகிய குளங்களின் நீர் மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து குளத்தின் வான்கதவுகள் கடந்த வியாழக்கிழமை திறக்கபட்டதன் காரணமாக ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புருட்டுமான் ஓடை, பள்ளக்காடு, வண்ணாத்தியாறு மற்றும் மாவடி ஓடை ஆகிய பிரதேசங்களில் வெள்ளநீர் பெருகியுள்ளதுடன் தோடு மாவடி ஓடை பாலமும் வெள்ளநீரால் உடைக்கப்பட்டுள்ளது.

மேலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது மக்களை மீட்கும் பணியில் ஏறாவூர்பற்று பிரதேச செயலகம், பிரதேச சபை, தொப்பிகலை இராணுவத்தினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ உறுப்பினர்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com