உயர் மட்டத்தவராயினும் சரி அப்பாவியானாலும் சரி குற்றம் செய்தால் இருவரும் சமமே – மகிந்த!
நீதியான நாட்டில் பண்புமிக்க எதிர்கால பரம்பரையைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் குற்றமிழைப்பவர்களுக்கு எந்தவித பாரபட்சமுமின்றி சட்ட த்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது என ஜனாதிபதி தெரிவித்தார்
கேகாலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் சமாதானத்தையும் ஒழுக்கத்தையும் பாதுகாத்து மக்கள் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் உச்ச அளவில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்து எனவும் கடந்த சில வருடங்களில் இந்த நாட்டில் இடம்பெற்றுள்ள அபிவிருத்தி வரலாற்றில் ஒரு போதும் இடம்பெறவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பல்வேறு பிரசாங்கள் மூலம் இந்த அபிவிருத்திச் செயற்பாடுகளை பின்னடையச் செய்வதற்கு சில சக்திகள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இன்று எதிர்க்கட்சியானது எதற்கெடுத் தாலும் சேறுபூசும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகிறது. வீதியொன்றை நிர்மாணித்தால் அதற்கான செலவு அதிகம் என பிரஸ்தாபிக்கும் எதிர்க்கட்சியினர் அவர்கள் வீதிகளை நிர்மாணிக்காமலே செலவு செய்தமை பற்றி இப்போது எவரும் பேசுவதில்லை. நாம் மோசடிகளில் ஈடுபடுவோரை நீதிமன்றத்தின் முன்நிறுத்தி வருகையில் முழுநாட்டிலும் ஊழல் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
எத்தகைய உயர் மட்டத்தவராயினும் சரி அப்பாவியானாலும் சரி குற்றம் செய்தால் இருவரும் சமமே. அத்தகையோருக்கு எத்தகைய பாரபட்சமுமின்றி தண்டனை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித் தார்.
0 comments :
Post a Comment