Wednesday, January 1, 2014

வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் விமான நிலையத்தில் பதியும் நடைமுறை நிறுத்தம்!!

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுச் செல்பவர்களை விமான நிலையத்தில் பதிவு செய்யும் நடைமுறை இன்று ஜனவரி முதலாம் திகதி முதல் நீக்கப்படுகிறது. இன்று முதல் பணியகத்தின் தலைமை அலுவலகத்திலும், பிர தான அலுவலகங்கள் சிலவற்றில் மட்டுமே பதிவுகள் மேற் கொள்ளப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய் ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளரும் பேச்சா ளருமான மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.

விமான நிலையத்துக்கு வருவதற்கு முன்னதாக பணியகத்தின் பிரதான அலுவல கங்களான பத்தரமுல்லையிலுள்ள தலைமை அலுவலகம், அநுராதபுரம், பதுளை, சிலாபம், தம்புள்ள, காலி, யாழ்ப்பாணம், திருகோணமலை, கல்முனை, மத்துகம, கண்டி, கேகாலை, வவுனியா போன்ற அலுவலகங்களில் பதிவு செய்ய முடியும். வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுச் செல்பவர்கள் தங்களது தொழில் ஒப்பந் தங்களை காண்பித்து பதிவு செய்த பின்னரேயே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். எனவே பதிவு செய்வது கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

பதிவுசெய்யாமல் வெளிநாடு செல்வதற்கு எத்தனித்து இறுதி நேரத்தில் பிடிபடு பவர்கள் வெளிநாடு செல்வதற்கு உள்ள சந்தர்ப்பத்தை இழக்க நேரிடும் என்ப தையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com