முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பம் மூலம் சந்திரனில் வீடுகளை நிர்மாணிக்க நாசா திட்டம்!
அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவானது முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்களை கணிணி மூலம் இயக்கப்படும் ரோபோ இயந்திரங்களை பயன்படுத்தி சந்திரனின் மேற்பரப்பில் 24 மணி நேரத்தில் வீடுகளை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
இந்நிலையில் மேற்படி முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை விருத்தி செய்வதற்கு அமெரிக்கா தென் கலிபோனியா பல்கலைக்கழகத்திற்கு நாசா தற்போது நிதியுதவி அளித்துள்ளது.
இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான சில பாகங்கள் பூமியில் உருவாக்கப்பட்டு ஏவுகணையொன்றின் மூலம் சந்திரனுக்கு கொண்டு செல்லப்பட வேண்டியுள்ளதுடன் இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேவையான 90 சதவீத மூலப்பொருட்கள் ஏற்கனவே சந்திரனில் உள்ளதாக கூறப்படுகின்றது.
மேற்படி புதிய வீடமைப்பு முறைமையைப் பயன்படுத்தி அனர்த்த வலயங்களிலும் சேரிப்பகுதிகளிலும் இலகுவாக வீடுகளை நிர்மாணிக்க முடியும் என தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பெஹ்ரோன் கொஷ்ருனவிஸ் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment