கல்முனை அமானா வங்கியில் தீ விபத்து!
கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள அமானா வங்கியில் நேற்று இரவு 8.30 மணியளவில் தீ விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதை அறிந்த பாதுகாப்புப் படையினர் பொலிஸாருடன் இனைந்து கல்முனை மாநகர சபையின் தீ அணைப்பு வண்டி மற்றும் பொது மக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
வங்கியின் முன்புறமாக உள்ள ஏ.ரீ.எம் இயந்திரத்திற்குப் பொருத்தப்பட்டுள்ள வாயு சீராக்கி (ஏ.சி) யில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே இத்தீ பரவத்தொடங்கியது என கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை இந்த தீ விபத்தால் ஏற்பட்ட புகை மண்டலம் பிரதேசம் முழுவதும் பரவிக்காணப்பட்டது.
0 comments :
Post a Comment