சிறையிலி்ருந்து விடுதலையாகி மூன்றாம் நாள் சிறைச்சாலை அதிகாரியின் வீட்டில் திருட்டு!
சிறைத் தண்டனை பெற்று விடுதலையான ஒருவர், அவர் சிறையிலிருந்த சிறைக்குப் பொறுப்பான சிறைச்சாலை அதிகாரியின் வீட்டை உடைத்து 2 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடியமை உட்பட இன்னும் 7 திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்தமைக்காக, கொழும்பு மேற்கு வடக்கு வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறைத் தண்டனை பெற்று விடுதலையாகி, இரண்டு நாட்களின் பின்னர் இந்நபர், குளியாப்பிட்டியில் அமைந்துள்ள சிறைச்சாலை அதிகாரியின் வீட்டைத் தேடிச் சென்று இந்தத் திருட்டைச் செய்துள்ளார்.
இதுதவிரவும், கட்டுநாயக்க, சீதுவ, கொச்சிக்கடை, ரத்தொலுகம பிரதேசங்களில் அமைந்திருந்த 6 வீடுகளினுட் புகுந்து ரூபா 5 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment