தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள நாவிதன்வெளி பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் தவிசாளர் எஸ்.குணரெத்னத்தினால் கடந்த டிசம்பர் 23 காலை 10 மணிக்கு சபையின் மாதாந்த அமர்வின் போது சமர்ப்பிக்கப்பட்டது. இதன் போது வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக 04வாக்குகளும், ஆதரவாக 03 (தவிசாளர் உட்பட) வாக்குகளும் அளிக்கப்பட்டன.
நாவிதன்வெளி பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் டிசம்பர் 30ஆம் திகதி மீண்டும் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப் பட்டது.
30ஆம் திகதி நடை பெறவிருந்த கூட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து சம்பந்தன் தலைமையிலான குழுவினரால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆனந்தன் என்பவர் வெளியேறும் மட்டும் கூட்டத்தை நடத்தப் போவதில்லை எனக் கூறி தவிசாளர் குணரத்தினம் சபை அமர்வில் இருந்து வெளியேறினார் .
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ள ஆனந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்வீட்டு சீர்கெட்ட நடைமுறைகளையும் வெளிப்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாவிதன்வெளி பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ.தஜாப்தீன் ஆளும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சின் செயலாளர் நாயகம் ஹசன் அலி உத்தரவிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது உறுப்பினரை கலைத்து விட்டு முஸ்லிம் காங்கிரஸிடம் சரணாகதியடைந்தபோதும் குறித்த உறுப்பினர் முஸ்லிம் காங்கிரசின் தலைமையிட்ட கட்டளையை ஏற்க மறுத்துள்ளார்.
இதையடுத்து நாவிதன்வெளி பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ.தஜாப்தீன் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரஊப்ஹக்கீம் மத்திய முகாமில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.
நாவிதன்வெளி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கட்சியின் தலைவர் உட்பட உயர்பீட உறுப்பினர்கள் வேண்டிக்கொண்டதையும் பொருட்படுத்தாது வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பெயரிலேயே இவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இதுவிடயமாக சம்மந்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினருக்கெதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அடுத்துவரும் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்காவிட்டால் கட்சியிலிருந்து நிரந்தரமாக நிறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமெனவும் அமைச்சர் ரஊப்ஹக்கீம் மேலும் காட்டமாக தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் மீள் பரிசீலனை செய்யவேண்டும் என நாவிதன்வெளி பிரதேச பெரும்பாலான முஸ்லிம் மக்கள் தலைவர் ரவுப் ஹக்கீமை கேட்டுள்ளனர்.
கட்சி கட்டுப் பாட்டை மீறுவதோ தலைமைத்துவத்தை மதிக்காத தன்மையோ உறுப்பினர் தஜாப்தீன் இடம் இல்லை எனத் தெரிவிக்கும் பொதுமக்கள் அவருக்கு நாவிதன் வெளி பிரதேச சபை தவிசாளர் குணரட்ணம் பேசிய வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் இருப்பதாக மனம் புலம்புகின்றார் எனத் தெரிவிக்கின்றனர்.
முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் யானை வருகிறது வெளிச்சம் போடுங்கள் என உறுப்பினர் தஜாப்தீன் தவிசாளரிடம் கூறி இருக்கின்றார் அதற்க்கு தவிசாளர் இரவில் அங்கெல்லாம் உனக்கென்ன வேலை விபச்சாரம் புரியவா போகப் போகிறாய் என கேட்டதாக உறுப்பினர் தஜாப்தீன் புலனாய்வு பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த ஒரு விடயதுக்காகதான் அவர் கட்சி தலைமை சொன்னதையும் கேட்காமல் இருக்கின்றார் பொருள் ,பணம் ,சொத்து என்பவற்றை விடவும் அதற்க்கு மேல் கட்சி ,தலைமைத்துவம் என்பவற்றுக்கும் மேலாக தன்மானம் என்பதை அவர் கடினமாக பார்கின்றார் . கட்சியில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப் படும் நடவடிக்கைகளை சற்று பிற்படுத்தி அவருக்கு ஏற்பட்டிருக்கும் மன உளைச்சலை போக்க கட்சியும் தலைமைத்துவமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகின்றனர்.
தஜாப்டீனுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் இந்த நிலை தலைமதுவதுக்கோ அல்லது செயலாளருக்கோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது மாகான சபை உறுப்பினர்களுக்கோ ஏற்பட்டிருந்தாலும் அவர்களும் இந்த முடிவைத்தான் எடுப்பார்கள் . தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலமைத்துவதுடன் தஜாப்தீனின் முறைப்பாடு பற்றி பேசியதன் பின்னரே இந்த முடிவை எடுக்க வேண்டும் என அந்த பிரதேச மக்கள் கேட்கின்றனர்
நாவிதன்வெளி பிரதேச சபையில் த.தே.கூ உறுப்பினர்கள் 04பேர், மு.கா 01,ஐ.ம.சு.கூ 01.த.ம.வி.பு 01மொத்தம் 07 உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment