ஓரு இனத்தின் நலன்களைப் பற்றியோ பிரச்சினைகள் பற்றியோ பேசுவது இனவாதம் அல்ல! - ராஜித
ஓரு இனத்தின் நலன்களைப் பற்றியோ பிரச்சினைகள் பற்றியோ அந்தந்த இனத்தவர் பேசுவது இனவாத மாகாது என்றும் அது இன்னோர் இனத்திற்குப் பங்கமாக அமையும் போதுதான் இனவாதமாகும் எனவும் எந்த ஓர் இனக் குழுமத்தினதும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அவற்றை முழுங்கடிப்பதற்கு முயற்சிக்கப்படுமானால் அது இயலாத விடயம் என்று கடற்றொழில் நீரியல்வள அமைச் சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தர்கா நகரில் தெரிவித்தார்.
வட பகுதியில் இருந்து வெளிவரும் சில பத்திரிகைகள் இனவாதத்தைத் தோற்று விப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. அதே நேரம் அரசாங்கத்தினால் வெளியிடப் படும் பத்திரிகைகள் இனவாதப் போக்கினைக் கொண்டிருப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. தமிழ் பேசும் மக்களுக்காக வெளியிடப்படும் பத்திரிகைகள் அந்த மக்களின் நலன்களை, அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்றனவா? என்பதைப் முதலில் பார்க்க வேண்டும்.
இனத்தின் நலன்களைப் பற்றிப் பேசுவது இனவாதம் அல்ல. தேசியவாதம் பேசுவது ஒன்றும் தவறு கிடையாது. அது ஏனைய இனங்களுக்குள் குரோதத்தைத் தோற்று விக்காது பார்த்துக்கொள்ள வேண்டும். இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைத் தோற்றுவித்து நிரந்தரமான அமைதியை ஏற்படுத்துவதற்குப் பத்திரிகைகள் துணை நிற்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment