நீதிமன்றத்தில் கையடக்க தொலை பேசியை ஒலிக்கவிட்டவர் தடுத்துவைக்கப்பட்டார்
வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது கையடக்கத் தொலைபேசியினை ஒலிக்கவிட்டவரை நீதிமன்ற நடவடிக்கைகள் முடியும் வரையிலும் தடுத்து வைத்திருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் எம்.ஜ.வகாப்தீன் பொலிஸாருக்கு உத்தரவிட்ட சம்பவம் இன்று (23.01.2014) நடைபெற்றது.
நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, வழக்கினை பார்வையிட்டுக் கொண்டிருந்த மேற்படி நபரின் கையடக்கத் தொலைபேசி திடீரென ஒலித்தமையினால் நீதிமன்றத்தின் அமைதி பாதிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த நபரை கைது செய்த கிளிநொச்சி பொலிஸார் நீதிபதியின் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியபோது நீதவான் இன்று(23.01.2014) பிற்பகல் 3 மணிவரை அவரைத் தடுத்து வைக்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment