கடவுச் சீட்டுக்களில் இனி கைவிரல் அடையாளம்!
எதிர்வரும் காலங்களில் வழங்கப்படும் கடவுச் சீட்டுக்களில் கைவிரல் அடையாளம் பதியப்பட உள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் சூளாந்த பெரேரா தெரிவித்துள்ளதுடன் இதற்கான முதற்கட்டமாக தகவல்களை திரட்டும் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் ஆரம்பமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போது கைவிரல் அடையாளங்களை கடவுச் சீட்டுக்களில் உள்ளடக்கும் யோசனைத் திட்டம் பூர்த்தியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன் விரைவில் இந்த திட்டத்திற்கான விலை மனுக்கோரல் கோரப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார்.
எனவே இந்த புதிய செயல்திட்டத்தின்பின் அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கடவுச் சீட்டு தயாரிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment