இலங்கைக்கு எதிராக தடைகளை ஏற்படுத்தி அரசையும் மக்களையும் அசௌகரியத்தில் ஆழ்த்துவதற்கு சர்வதேசம் சூழ்ச்சி செய்து வருவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இலங்கை பல்வேறு சவால்களை சந்தி த்த ஒரு நாடாகும். மேலும் பல கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மார்ச் மாதத்தில் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா சமர்ப்பிக்கும் பிரேரணை அங்கீகரிக்கப்பட்டால் சர்வதேச கண்காணிப்பு குழு வொன்று இலங்கைக்கு அனுப்பப்படும். அவர்கள் யுத்த குற்றம் தொடர்பாக ஆராய்வார்கள். இதற்கு மத்தியில் பிரிட்டனும் அமெரிக்காவும் இலங்கைக்கு எதிராக தடைகளை விதிப்பதற்கு தயாராகி வருகின்றன. மக்கள் மத்தியில் அழுத்தங்களை ஏற்படுத்தி அதற்கு காரணம் அரசாங்கமே என்பதை உணரச் செய்து மக்களாலேயே அரசாங்கத்தை மாற்றும் சூழ்நிலையொன்றை ஏற்படுத்துவதற்கு இந்நாடுகள் முயற்சிக்கின்றன.
பொது தேர்தலின் போது தமது கைப்பொம்மைகளை வெற்றிப் பெறச் செய்வதற்காக இது போன்ற அழுத்தங்களை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புண்டு. இதனை எதிர் கொள்வதற்கு நாம் அனைவரும் ஐக்கியத்துடன் செயற்பட வேண்டும்.
கடுவலை பிரதேசத்தில் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கான நிதியுதவி வழங்கும் வைபவத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.
No comments:
Post a Comment