Monday, January 20, 2014

புலி உறுப்பினரை நாடு கடத்துமாறு பிரான்ஸிடம் இலங்கை கோரிக்கை!

பயங்கரவாத குற்றச் செயல்களுடன் தொடர்புடையதற்காக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர் ஒருவரை நாடு கடத்துமாறு பிரான்ஸிடம் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.


குறித்த சந்தேக நபர் பிரான்ஸில் தாம் தொழில் புரியும் இடத்தில் உரிய சலுகைகள் வழங்கப்படவில்லை என்பதனை முறைப்பாடு செய்ய காவல் நிலையத்திற்கு சென்றிருந்த போது குறித்த நபர் பற்றிய தகவல்கள் அம்பலமாகியுள்ளதுடன் அவர் பிரான்ஸிலேயே வாழ்ந்து வருகின்றமை தற்செயலாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

35 வயதான ஜெயந்தன் தர்மலிங்கம் என்பவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் இலங்கைப் பயங்கரவாதம் தொடர்பில் சர்வதேச ரீதியில் தேடப்பட்டு வரும் பட்டியலில் இவரின் பெயர் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com