அரச சார்பற்ற நிறுவனங்கள் போலிப் பிரச்சாரங்களை கைவிட வேண்டும் : ஜனாதிபதி!!
அரச சார்பற்ற நிறுவனங்கள் போலிப் பிரச்சாரங்களை கைவிட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சனச நிறுவனம் போன்று மக்களுக்கு சேவையாற்றுவதற்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண் டும். அனைத்து இன மத மக்களும் சகவாழ்வுடன் வாழ்ந்து வரும் நாட்டில் மனித உரிமை மீறல் இடம் பெறுவதாக போலி க்குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது, தமிழ் புலம்பெயர் சமூகம் கண்ணாடி கூட்டுக்குள் இருந்து கொண்டு கல் எறிகின்றது.
போர் நிறைவின் பின்னரே புலம்பெயர் தமிழர்களுக்கு எம்மை பற்றிய நினைவு வந்துள்ளது. 30 ஆண்டுகால போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் வடக்கைப் போன்றே தெற்கிலும் சுதந்திரம் உருவாகியுள்ளது என அவர் தெரிவி த்துள்ளார். கேகாலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment