இந்தியாவில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபடுகின்றனர் இலங்கைக் குழுவினர்!
இந்தியாவில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றில் இலங்கைக் குழுவினர் ஈடுபடுகின்றனர் இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் சென்னையில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டொக்டர் ராஜித சேனரத்ன தலை மையில் 8 பேர் கொண்ட குழுவொன்று நேற்று மாலை இந்தியாவுக்கு பயணமானது.
இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக நல்லெண்ண அடிப்படையில் இந்திய மீனவர்கள் 32 பேரை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்தது. தமிழக சிறைகளில் உள்ள 52 இலங்கை மீனவர்களை தமிழ்நாட்டு அரசு விடுத்தது.
இன்றைய முதற் கட்ட இரு தரப்பு பேச்சுவாரத்தை இன்று காலை 11.30 மணிக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்திசுடன் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இந்திய மத்திய விவசாய அமைச்சர் சரத் பவாருடன் பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment