Wednesday, January 22, 2014

பிரித்தானியப் பிரஜையின் கொலை தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பி.ச.தலைவர் புலனாய்வு பிரிவினரால் கைது!

பிரித்தானியப் பிரஜையின் கொலைவழக்குடன் தொடர்பு டைய பிரதேச சபைத் தலைவர் குற்றப்புலனாய்வு பிரிவி னரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரித்தானியவை சேர்ந்த ஹராம் சைக் கொலை வழக்குடன் தொடர்புடையதாகக் கருதப்படும் தங்காலைப் பிரதேச சபைத் தலைவர் சம்பத் சந்திர புஷ்ப விதானபத்திரனவே கோட்டேயில் நேற்று செவ் வாய்க்கிழமை இரவு விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹராம் சைக்கை கொலை செய்தமை, அவர் நண்பியை துன்புறுத்தியமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஜனவரி மாதம் 09ஆம் திகதி நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காமையால் இவருக்கு எதிராக பிடியாணையை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்திருந்தது.

சம்பத் சந்திர புஷ்ப விதானபத்திரன சுகவீனம் காரணமாக காலி தனியார் வைத் தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும் அவரது பிணையாளிகள் நீதிமன்றத்துக்கு வந்திருப்பதாகவும் வழக்குரைஞர் கூறியபோதிலும், நீதவான் பிடியாணை பிறப் பித்து அவரது மருத்துவச் சான்றிதழை ஜனவரி மாதம் 22ஆம் திகதி கொண்டு வருமாறு பணித்தார்.

கைது செய்யப்படும் வேளையில் குறித்த சந்தேக நபர் வீடொன்றில் மறைந் திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com