வீட்டுக் கிணற்றில் ஊற்றெடுக்கும் டீசல்!!
மினுவங்கொடை, கட்டுவெல்லகம – பாளுகங்கவெல பிரதே சத்தில் கடந்த 15 வருடங்களாக குடிநீருக்காக பயன் படுத்த ப்பட்ட கிணற்றில் டீசல் ஊற்றெடுத்து வருகிறது. கிணற்றில் நீர்மட்டத்திற்கு மேல் எண்ணெய் தன்மை உள்ள திரவம் மிதப்பதை அவதானித்த கிணற்றின் உரிமையாளர் அதில் இருக்கும் நீரை இறைத்துள்ளார். தண்ணீரில் டீசல் கலந்து ள்ளதாக அறிந்து கொண்ட வீட்டின் உரிமையாளர்கள் ஒரு பரல் தண்ணீர் கிணற்றில் இருந்து எடுத்துள்ளதுடன் அதில் 80 வீதம் டீசல் இருந்துள்ளது.
நீர் பம்பியின் உதவியுடன் கிணற்றில் உள்ள நீர் அப்புறப்படுத்தப்பட்ட போதிலும் தொடர்ந்தும் கிணற்றில் டீசல் ஊற்றெடுத்து வருகிறது என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அருகில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்தே கிணற்று நீரு டன் கழிவு பொருள் கலந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment