தென், மேல் மாகாண சபைகள் கலைப்பு!
மேல் மற்றும் தென் மாகாண சபைகள் நேற்று (12.01.2013) நள்ளிரவு 12 மணியுடன் கலைக்கப்பட்டதாக மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானாவும் தென் மாகாண ஆளுநர் குமாரி பாலசூரியவும் தெரிவித்துள்ளனர்.
இரு மாகாண சபைகளும் கலைக்கப்பட்டமையை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல்கள் ஆளுநர்களின் கையொப்பங்களுடன் தயாராகிவிட்டதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதே வேளை புதிய மாகாண சபைகளை நியமிப்பதற்கான மாகாண சபைத் தேர்தல்கள் மார்ச் மாத இறுதியில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதே சமயம் மாகாண சபைகள் கலைக்கப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவித்தல் உத்தியோகபூர்வமாக கிடைக்கப்பெற்றதும் இரண்டு மாகாணங்களிலும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென தேர்தல்கள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment