Tuesday, January 7, 2014

அரசை கவிழ்க்கும் முனைப்புக்களில் அமெரிக்கா – விமல் வீரவன்ச!


அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தில் மாற்றம் செய்யும் முனைப்புக்களில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதுடன் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் என்பது தெளிவாகத் தெரிகின்றது என வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மேலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை பயன்படுத்தி இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா முயற்சிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனெனில், அமெரிக்கா ஏனைய உறுப்பு நாடுகள் மீது அழுத்தம் செலுத்தக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பமாக சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இது மட்டும்லாது இந்த ஆண்டின் நிறைவில் அமெரிக்காவின் உள்நோக்கம் என்னவென்பது தெளிவாக அனைவருக்கும் புலனாகும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

1 comments :

Arya ,  January 7, 2014 at 9:37 PM  

இது உண்மை, மக்கள் பலம் இந்த அரசுக்கு இருப்பதால் அவர்களால் அசைக்க முடியவில்லை , ஆனால் காலப்போக்கில் பல காரணங்களால் அவர்கள் முயற்சி இலகுவாகலாம் , இவ்விடையத்தில் அரசு மிக கவனம் எடுக்க வேண்டும், TNA போன்று நாட்டை காட்டி கொடுப்பவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் , தேச துரோகத்துக்கும் பிரிவினை பேசுபவர்களுக்கு மரண தண்டனை என்று சட்டத்தை மாற்ற வேண்டும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com