கண்ணாடிக் கற்கள் இரத்தினக்கற்களாய்…! மாட்டினார் கம்பொல முஸ்லிம் நபர்!
விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட இரத்தினக் கற்கள் எனக்கூறி, கண்ணாடிக் கற்கள் எனக்கூறப்பட்ட 6 கற்களுடன் கம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர் பாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் வியாபாரி ஒருவருக்கு சந்தேகநபர் ஏற்கனவே கண்ணாடிக் கற்கள் 9 இனை இரத்தினக் கற்கள் எனக்கூறி ரூபா 6 இலட்சத்திற்கு விற்பனை செய்த்தாக, விசாரணைகளின் போது சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.
பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அடுத்தநாள் வருமாறு யாழ்ப்பாண வியாபாரி குறிப்பிட்டதை அடுத்து, அடுத்த நாள் போலிக் கற்களை விற்பனை செய்த சந்தேக நபர் பொலிஸாரிடம் வசமாக மாட்டிக் கொண்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள அந்நபர், ஏற்கனவே நாட்டின் பல பாகங்களிலுமுள்ள வியாபாரிகள் பலருக்கு இவ்வாறு கண்ணாடிக் கற்களை இரத்தினக் கற்களாக விற்பனை செய்த்து ஆரம்பக் கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment