குடு கொண்டுவந்தவரை பிடிக்க முடியாதா? கேட்கிறார் தேரர்
ஜனசெத்த முன்னணியின் தலைவர் வண. பத்தரமுல்லே சேனாரத்ன தேரர், நேற்று பிற்பகல் ஊடக சந்திப்பொன்றை ஒழுங்குசெய்திருந்தார்.
அவ்ஊடகவியல் சந்திப்பின்போது அவர்,
“நடைமுறையிலுள்ள பொலிஸ் திணைக்களத்தினால் பிடிக்க முடியாத கள்வர்களை, தீயவர்களை தற்போதுபிடிக்கிறார்கள். நீதிமன்றத்திலிருந்து தப்பிச்சென்ற தங்கல்லை பிரதேச சபைத் தலைவர் கைது செய்யப்பட்டார். அதற்கு முன் ஏன் அந்த பிரதேச சபை உறுப்பினரை பிடிக்கமுடியாதிருந்தது எனக் கேட்கின்றேன்.....
நான் ஏற்கனவே ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன் அவரைக் கைதுசெய்யுமாறு.. இன்று அவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார். அதேபோல நான் அரசாங்கத்திடம் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன்... என்னவென்றால், இந்த குடு (போதைப் பொருள் கொண்டுவந்தவரை) பிடிக்க முடியாதா? எனக் கேட்கின்றேன்“ எனவும் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment