Friday, January 10, 2014

குப்பை அள்ளுவதற்கு கல்விப் பெறுபேறு கோரிய வவுனியா நகரசபை: குவியும் விண்ணப்பங்கள்

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படுகின்ற கழிவுகளை அகற்றுவதற்கான தொழிலாளர்களை நியமிப்பதற்கு கல்விப் பொது சாதாரணதரத்தில் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்'டும் எனக் வவுனியா நகரசபை விண்ணப்பங்களை கோரியுள்ளது.

ஏற்கனவே ஒப்பந்த அற்றும் அமைய அடிப்படையில் வேலை செய்பவர்களுக்கு கல்வித்தரம் இல்லாதவிடத்து அவர்களை நீக்கிவிட்டு புதியவர்களை உள்வாங்கும் நோக்குடன் இவ் விண்ணப்பங்கள் வவுனியா நகரசபைச் செயலாளர் க.சத்தியசீலன் அவர்களால் கோரப்பட்டுள்ளது. அவ் விண்ணப்பங்களில் குப்பை அள்ளும் தொழிலாளிகளை சுகாதார ஊழியர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளதால் வேலையின் தன்மையைத் தெரியாத பலர் 100 ரூபாய் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பத்தை பெற்று வருகின்றனர்.

இது இவ்வாறு இருக்க கடந்த 7 ஆம் திகதி முதல் இவ் ஆட்சேர்ப்புக் கல்வித் தகமை பார்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து ஒப்பந்த, அமைய அடிப்படையிலான நகரசபை சுகாதார ஊழியர்கள் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், கல்வித்தகமையை குறைத்து ஏற்கனவே வேலை செய்தவர்களை உள்வாங்குவதாக வடமாகாணசபை வழங்கிய உறுதிமொழியை அடுத்து இன்று (10) போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com