வத்திகானில் காதலர் தினத்தை கொண்டாட வருமாறு காதலர்களுக்கு பாப்பரசர் அழைப்பு!
திருமணம் நிச்சயிக்கப்பட்ட அல்லது புதிதாக திருமணத்துக்குத் தயாராகிவரும் ஆண் பெண் காதல் ஜோடிகள் அனைவரயும் எதிர்வரும் காதலர் தினத்தில் தன்னை சந்திக்க வருமாறு புனித பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளாதாக வத்திகான் நிர்வாகம் பல்வேறு மொழிகளிலும் இந்த அறிவித்தலை விடுக்கப்பட்டுள்ளதுடன் இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன் இதற்கான முன்பதிவுகள் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த செயின்ட் வலென்டைன் எனும் பாதிரியார் காதலர்களுக்கு உதவியமைக்காக கொலைசெய்யப்பட்டார் என தெரிவித்துள்ள வத்திக்கான் நிர்வாகம் அவருடைய 273 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி அவர் மரணித்ததை நினைவுகூரும் வகையிலேயே காதலர் தினம் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
0 comments :
Post a Comment