வெளிநாடுகளில் இருக்கும் இலங்கை நாணயங்களை மீண்டும் கொண்டுவர முயற்சி!
இலங்கையில் சில்லறை நாணயங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டிலிருக்கும் தமது நாணயங்களை மீண்டும் நாட்டுக் கொண்டுவர இலங்கை முயற்சிகளை எடுத்து வருவதுடன் முதற் கட்டமாக இந்திய ஆலயங்களிலுள்ள சுமார் இருபது டன்கள் அளவுக்கான நாணயங்களை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவர மத்திய வங்கி முயற்சிகளை எடுத்துவருகிறது.
இந்தியா மட்டுமல்லாது இலங்கையிலிருந்து நேபாளத்துக்கு புனித யாத்திரை செய்யும் பௌத்தர்கள் அங்குள்ள உண்டியல்களில் தமது காணிக்கைகளை செலுத்தி வருவதுடன் புத்தகயாவில் மட்டும் பத்து டன்கள் அளவுக்கு இலங்கை நாணயங்கள் உள்ளன என்று தங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் மத்திய வங்கியின் பேச்சாளர் தமாரா விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இது மட்டும்லாது தற்போது புத்தகயாவிலுள்ள ஆலய நிர்வாகத்தினருடன் மத்திய வங்கி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது எனவும் அவர் கூறிய அவர் இந்தியத் திருத்தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் இலங்கையர்கள் இந்திய நாணயங்களையே காணிக்கையாக செலுத்துமாறு இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
0 comments :
Post a Comment