யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ் பொலிஸார் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்!
மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை க்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ். தெல்லிப்ழையைச் சேர்ந்த தமிழ் சரவணபவன் கஜமாறன் வயது 26 என்ற தமிழ்ப் பொலிஸ் உத்தியோகஸ்தர் சிகிச் சைப் பலனின்றி இன்று(15.01.2013) காலை உயிரிழந்துள் ளாதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கடந்தவாரம் பத்தாம் தேதி அச்சுவேலி பொலிஸ் நிலையத்திலிருந்து நெல்லியடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டர் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மீன்கம்பத்துடன் மோதி படு காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த நான்கு நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காதமையினால் இன்று காலை உயிரிழந்துள்ளதாகவும், இவரின் இறுதிக் கிரியைகள் பொலிஸ் அணிவகுப்பு மரியாதையுடன் நாளை நடைபெற வுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment