'திருகணை' சாரைப்பாம்பானது !!
பொதுச் சந்தையில் பழங்கள் விற்றுக்கொண்டிந்த பெண்ணொ ருவரின் தலையில் விழுந்த திருகணையொன்று திடீரென மாய மாக மறைந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற் பட்ட சம்பவமொன்று பிலியந்தலை பிரதேசத்தில் இடம் பெற்று ள்ளது. பழ வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்ணின் தலையில் திடீரென்று திருகணை (பாத்திரங்களை வைக்கும் வட்ட வடிவிலான உபகரணம்) போன்றதொரு பொருள் விழுந் துள்ளதுடன் விழுந்த வேகத்தில் அது மாயமாக மறைந்துள்ளது.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், அந்த திருகணையைத் தேடும் வேட்டையில் அங்கிருந்த சிலரும் ஈடுபட்டுள்ளனர். இதன்போது அந்த திரு கணை, சந்தையில் ஒரு மூலையிலிருந்ததை அவதானித்ததுடன் அதனை எடுக்க முயன்றபோது தான் அது திருகணையல்ல சாரைப்பாம்பு என்பது தெரியவந்து ள்ளது.
0 comments :
Post a Comment