Monday, January 13, 2014

அனைவருக்கும் எமது இதையம் கனிந்த தைப் பொங்கல் வாழ்த்துக்கள்!

வறண்டுபோய் இருக்கும் உள்ளங்ளின் மனங்கள் மாறி ஆரோக்கியம் பெருகி, வளம் நிறைய, நலம் வளர, இறையருள் கூட எல்லோருக்கும் இலங்கை நெற் இணைய ஆசிரியர்களின் இதையம் நிறைந்த தைப் பொங்கல் நல்நாள் வாழ்த்துகள்.

சுட்டெரிக்கும் சூரியனாய்....

சுட்டெரிக்கும் சூரியனின் வரவுக்காய்
காத்திருக்கும் நேரத்திலே
ஏர் பிடித்த கரங்களெல்லாம் தம்
இதயமதால் நன்றி சொல்லக்
காத்திருந்த தைப் பொங்கல்
கனிந்திங்கே வந்ததென்றால்
சொல்லவா வேண்டும்?

உழவர்கள் மனம் போல
வெள்ளையடித்து
முற்றத்தில் கோலமிட்டு
வெடி முழக்கத்தோடு
கதிரவன் எழும் முன் எழுந்து

தலை வாழை இலை போட்டு
நிறை குடமும் வைத்தங்கே
புதிய கரும்போடு பூ பழங்களும்
புத்தொளி வீசும் குத்துவிளக்கேற்றி
திக்கெட்டும் ஒளி உலகெங்கும் பரவட்டும்

பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
என கதிரவனுக்கு பொங்கி வடித்திடும்
காலம் வந்ததெல்லோ.

காய்ந்திரக்கும் பூமி எல்லாம்
மாரி மழை பெய்து
உழவர்கள் மனங்குளிர
வைக்காதோ இந்தப் பொங்கல்!

பொங்கலோ பொங்கல்
கதரவன் வரவுக்காய்
காத்திருக்கும் பொங்கல்.....
(இலங்கை நெற் ஆசிரியர் குழு)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com