டுபாயிலிருந்து தங்கம் கடத்தியவர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது!
சுமார் ஐந்து கோடி ரூபா பெறுமதியான 10 கிலோ கிராம் தங்க பிஸ்கட்டுக்களை சட்டவிரோதமாக டுபாயிலிருந்து இலங்கைக்கு எடுத்துவந்த 54 வயதுடைய இலங்கை பிரஜை ஒருவர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை சட்டவிரோதமான முறையில் தங்கம் எடுத்து வந்த தாய் மற்றும் மகள் ஆகியோரும் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து 20 தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க ஊடகப்பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment