பிள்ளைகளே, நான் மன்னன் அல்லன்.. தற்காலிக பாதுகாவலனே! - ஜனாதிபதி மகிந்த
தான் ஒரு மன்னன் அல்லன் எனவும், இந்நாட்டின் பாதுகாவலன் மட்டுமே எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிடுகிறார்.
மாகந்துரை மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடைபெற்ற போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி.அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
“நான் இங்கு வரும்போது பிள்ளைகள் என்னைப் பார்த்து அன்புள்ள மன்னன் நீங்கள் என்று சொன்னார்கள். ஐயோ பிள்ளைகளே, என்னை நீங்கள் அன்புள்ள அப்பா என்று சொல்லியிருந்தால் நான் உங்களை மதித்து ஆசிர்வதித்திருப்பேன்… நான் மன்னன் அல்லன். நான் எப்பொழுதும் சொல்வதையே இப்பொழுதும் சொல்கிறேன்… நான் தற்காலிக பாதுகாவலனே” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment