ஊர்காவற்துறைப் பகுதி பற்றைக் காணியிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு!
தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போயுள்ளதாக கடந்த 14ஆம் தேதி ஊர்காவற்றுறை பொலிசில் முறையிடப்பட்டிருந்த ஊர்காவற்துறையைச் சேர்ந்த அன்டன் ஜஸ்டின் (வயது 19) என்ற இளைஞனின் சடலம் பற்றைக் காணி ஒன்றில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment