மலசல கூடத்தில் பிரசவம், இறந்த சிசுவை விட்டு ஓடிய தாய் : யாழ் அச்சுவேலியில் சம்பவம்!!
பெண்ணொருவர் மலசலகூடத்தில் குழந்தையை பிரசவித்து, குழியினுள் கைவிட்டுச் சென்ற சம்பவம் அச்சுவேலியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த 32 வயதுடைய பெண்ணொருவர், வைத்தியசாலை மலசல கூடத்தில் குழந்தையினை பிரசவித்துள்ளார். ஐந்து மாதமேயான அச்சிசு இறந்து பிறந்துள்ளது. இதனையடுத்து குறித்த சிசுவை மலசலக் கூடக் குழியினுள் போட்டுவிட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் அவர் வைத்தியசாலையின் மலசலகூடத்தில் குழந்தையொன்றை பெற்றெடுத்து அதனை மலசலகூட குழியினுள் போட்டுவிட்டுச் சென்றதை, அவ தானித்த வைத்தியசாலை நிர்வாகத்தினர் உடனடியாக அச்சுவெலி பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து. குறித்த பெண்ணைக் கைது செய்து பொலிஸார், யாழ் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கணவரைப் பிரிந்து வாழும் குறித்த பெண்ணுக்கு தகாத உறவின் மூலம் இக் குழந்தை உருவானதாகவும், கருவைக் கலைப்பதற்கு மேற்கொண்ட முயற் சியில் ஐந்து மாதங்களில் குழந்தை இறந்து பிறந்துள்ளதாக விசாரணையின்போது குறித்த பெண் தெரிவித்துள்ளார் என அச்சுவேலிப் பொலிஸார் குறிப்பிட்டனர். இது தொட ர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் மேற்கொண்டு வரு கின்றனர்.
0 comments :
Post a Comment