பலஸ்தீன் நாட்டின் அதியுயர் "நட்சத்திரம் விருது" ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு!
பலஸ்தீன நாட்டின் அதியுயர் விருதான 'பலஸ்தீனின் நட்சத்திரம்’ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பலஸ்தீன் அரசாங்கம் இன்று வழங்கி கௌரவித்தது. இந்த விருது விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ “இலங்கைக்கும் பலஸ்தீன அரசுக்கும் இடையிலான உறவு தனித்துவமானது என்பதுடன் பலஸ்தீன அரசுக்கும் நட்புறவும் மிக்க பலஸ்தீன மக்களுக்கும் நாம் எப்போதும் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்” எனத் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை மக்கள் சார்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் பலஸ்தீன் ஜனாதிபதி யாசிர் அரபாத்துக்கும் தற்போதைய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுக்கும் ‘ஸ்ரீலங்கா மித்ர விபூஷன’ விருதினை வழங்கிவைத்தார்.
0 comments :
Post a Comment