கனடா பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா தெளிவான நிகழ்ச்சி நிரல் ஒன்றுடனேயே இலங்கை வந்திருந்தார் எனவும் ராதிகா தெரிவித்த குற்றச்சாட்டுக்களில் எதுவித உண்மையும் இல்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், கனடா எம்.பியின் இலங்கை விஜயம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர், நாம் விரும்பியி ருந்தால் அவரின் இலங்கை விஜயத்தைத் தடுத்திருக்க முடியும். தேசிய பாதுகாப்புக்காக ஏதும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம். அவ்வாறு நடக்காமலும் இருந்திருக்கலாம்.
ஆனால் அவரின் நடமாட்டங்களைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. அவருக்கு சுதந்திரமாக எங்கும் சென்றுவர இடமளிக்கப்பட்டது. எந்த இடையூறும் செய்யப்படவில்லை. கனடா எம்.பி தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் எதுவித அடிப்படையும் அற்றவை. அவற்றை ஏற்கமுடியாது என்றார்.
No comments:
Post a Comment