ஜனாதிபதியின் மாளிகைக்குள் நுழைய முயன்றவர் கைது !!
கண்டியிலுள்ள ஜனாதிபதியின் மாளிகைக்குள் நேற்று மாலை நுழைய முயன்ற கட்டுகஸ்தோட்டையை சேர்ந்த ஒருவரை அங்கிருந்த பாதுகாப்பு தரப்பினர் பிடித்து தம்மிடம் ஒப்படை த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனது பிள்ளையை பாடசாலைக்கு தரம் ஒன்றுக்கு சேர்க்காமை தொடர்பில் ஜனா திபதியிடம் முறையிடவேண்டும் என்றே கைது செய்யப்பட் டுள்ள சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபரை கண்டி, மனநல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் மனநல வைத்திய அறிக்கை கிடைத்ததன் பின்னர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment