பயங்கரவாத நடவடிக்கை தொடர்பில் புலி உறுப்பினர் பிரான்ஸ்சில் கைது
பல்வேறு பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த கிளிநொச்சியை சேர்ந்த 35 வயதான ஜெயநாதன் தர்மலிங்கம் என்ற புலி உறுப்பினர் பிரான்ஸ் பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு சென்றிருந்த வேளையில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று வெளிநாட்டுச்செய்திகள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோதமான வேலை வாய்ப்புகள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு சென்ற சமயத்தில் பொலிஸார் இவரை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்துள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் பல்வேறு பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டுவரும் நபர்கள் பட்டியலில் அவருடைய பெயர் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :
Post a Comment