கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது! வாசுதேவ
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட விடயங்கள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன என மொழி ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இரு மொழி உதவு நிலையத்தை நேற்றைய தினம் திறந்து வைத்து உரையாற்றும் பேதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இரு மொழிக்கொள்கை மற்றும் மொழிசார்ந்த ஒருமைப்பாட்டை அவசியம் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கோடு வவுனியாவில் இவ் இரு மொழி உதவு நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இலங்கை பல்லின மக்கள் வாழ்கின்ற நாடாகும். அவ் இனங்கள் ஒவ்வொன்றும் தமது தமது கலாசாரப் பண்பாடுகளையும் பின்பற்றுவதற்கும் தமது மொழியை பயன்படுத்துவதற்கும் உரிமையுண்டு. அதனை பேணிப் பாதுகாக்கும் நோக்குடன் மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் எமது அமைச்சு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனை மக்களும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் வாசுதேவ இங்கு தெரிவித்தார்.

0 comments :
Post a Comment