Thursday, January 16, 2014

பெண் சிசுவின் கழுத்தை வெட்டிக் கொன்றான் தந்தை!

வலஸ்முள்ள - மித்தெனிய பிரதேசத்தில் தனது பெண் சிசுவை கழுத்து வெட்டி கொலை செய்த தந்தையை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வயது 9 மாதமுடைய பெண் சிசு நேற்று (15) இரவு இவ்வாறு கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளது.

மனைவியை விட்டு பிரிந்திருந்த கணவர்நேற்று இரவு வீட்டுக்கு வந்து சிசுவை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் மனைவிக்கு அழைப்பை எடுத்து குழந்தை வேண்டுமாயின் தேக்கவத்த பிரதேசத்திற்கு வரும்படி கூறியுள்ளார்.

எனினும் மனைவியின் உறவுக்கார சகோதரர் ஒருவர் சிசுவை அழைத்துச் செல்ல சென்றபோது சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com