சுற்றுலா விசாவில் இலங்கைக்குள் நுழைந்து இரவு விடுதியில் நடனமாடிய ஐந்து இந்திய பெண்கள் கைது!
சுற்றுலா விசாவில் இலங்கைக்குள் நுழைந்து பொரளை பேஸ் லைன் வீதியிலுள்ள இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றில் நடனம் ஆடிவந்த ஐந்து இந்திய பெண்கள் உட்பட ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர், குறித்த விடுதியில் மேற்கொண்ட அதிரடி சோதனையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
விசா விதிமுறை களை மீறிய குற்றச்சாட்டின் பேரி லேயே ஐந்து இந்திய பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் குறித்த இந்திய பெண்களை களியாட்ட விடுதியில் பணிக்கு அமர்த்திய குற்றச்சாட்டின் பேரில் அந்த இரவு நேர களியாட்ட விடுதியின் உரிமை யாளரையும் பொலிஸார் மடக்கிப் பிடித்துள் ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஐந்து இந்திய பெண்களை சட்டநடவடிக்கை எடுக்கும் பொருட்டு குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினரிடம் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.
0 comments :
Post a Comment