வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்த கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கட்சி அடிப்படை உறுப்புரிமையிலிருந்து நீக்கம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்த கூட்டமைப்பின் உறுப்பினர்களை கட்சி அடிப்படை உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ள தாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் கடந்த வாரம் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது சபையின் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏழு உறுப்பினர்களும் இணைந்து தோற்கடித்தனர்.
இந்நிலையில் கட்சியின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க காரணமாக இருந்த சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை கட்சி உறுப்புரி மையிலிருந்து தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்கின்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டதற்கு அமைய வலி கிழக்கு பிரசே சபையின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க உறுதுணையாக இருந்த கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டதாக ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment