போலி அடையாள அட்டை பெற அதிக விண்ணப்பங்கள்!
கடந்த வருடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களுள், 6500 விண்ணப்பங்கள் சந்தேகத்துக்கு இடமானவை என்று அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் இவற்றில் 23 பேரின் அடையாளங்கள் போலியானவை என உறுதிப்படுத்திய ஆட்பதிவு திணைக்களம் இவர்களின் விபரங்களை குற்றப் புலனாய்வு தரப்பிற்கு வழங்கியுள்ளது.
இந்த புதிய விண்ணப்பங்களில் அதிகமானவை முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுவதுடன் இது குறித்து விசாரணைகளை குற்றப் புலனாய்வு தரப்பினர் மேற்கொள்ளவுள்ளனர்.
0 comments :
Post a Comment