வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் தீர்மானத்திற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பாக கடந்த 27.12.2013 அன்று நடைபெற்ற சபைக் கூட்டத்தில், நான்கு உறுப்பினர்களின் ஆதரவுடன், வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து,மேற்படி கூட்டத்திற்கு வருகை தராதிருந்த உறுப்பினர்களின் சார்பில் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளரும், உறுப்பினருமான திரு.சூ.சே.குலநாயகம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.அவரது முறைப்பாட்டின் படி, கடந்த 27.12.2013 அன்று வல்வெட்டித்துறையின் நகர சபையின் அமர்வு நடைபெற்ற போது,தான் உட்பட ஏனைய நான்கு உறுப்பினர்களுக்கு சபைக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாமைக்கும், பிரதான வாயில் பூட்டப்பட்டிருந்தமையால்,தமது பிரசன்னமின்றி 2014 ஆம் ஆண்டு;ககான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டமைக்கும் எதிராக 1996 ஆம் ஆண்டு, 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் 18 (சி) யின் பிரகாரம், எஸ்.எக்ஸ்.குலநாயகத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டடுள்ளது.
மேற்படி வரவு செலவுத் திட்டம் ஏற்கனவே குறிப்பிட்டபடி நான்கு உறுப்பினர்கள் சமுகமளித்திருந்த நிலையில் தலைவர் ந.அனந்தராஜ் அவர்களினால் சமர்ப்பிக்கப் பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கனகராஜா ஜெயராஜா அவர்கள் முன்மொழிய,ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பொன்னுத்துரை தெய்வேந்திரம் அவர்கள் வழிமொழிய ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதேவேளை தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா,சம்பந்தன் அவர்களும், பொதுச் செயலாளர் மாவை.சோ.சேனாதிராஜா அவர்களும் கூட்டாக விடுத்த அறிக்கையில்,வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பவர்களின் பதவி பறிக்கப்படுவதுடன்,கட்சியில் இருந்தும் நீக்கப்படுவார்கள் என்று கடுமையாகத் தெரிவித்ததன் பின்னரும் பல உள்ளுராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திடடங்கள் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment