Monday, January 6, 2014

பாக்கிஸ்தானில் 900 ஆண்டுக்கு முந்தைய பழமைவாய்ந்த சிவன் கோவிலில் 66 ஆண்டுகளின் பின் பூஜை!

புணரமைப்பு பணி முடிவடைந்ததும் தானாக நிரம்பிய ஆலய தீத்தக்குளம்” பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் சக்கரவால் என்னும் இடத்தில் உள்ள 900 ஆண்டுகளுக்கு முந்தைய புராதன வரலாற்று சிறப்புமிக்க கடாஸ்ராஜ் சிவன் கோவிலில் 66 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பூஜைகள் தொடங்கியுள்ளன.

இந்த புராதன ஆலையத்திற்கு என ஒரு குளம் காணப்படுவதுடன் இந்தக்குளம் சிவனின் கண்ணீரால் உருவானதாக தல வரலாறு கூறுகிறது இதனால் இந்தக் குளத்தில் மூழ்கி எழுந்தால், பாவங்கள் விலகும் என்று இந்துக்கள் நம்பினர். இந்த நிலையில் கடந்த 1947 ஆம் ஆண்டு இருநாட்டு பிரிவினைக்குப் பின், இந்தக் கோவிலில், பூஜைகள் நிறுத்தப்பட்டு, மூடப்பட்டதுடன் கோவில் குளத்தைச் சுற்றிலும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதாலும், பராமரிப்பு இல்லாததாலும், குளம் வறண்டு போனது.

இந்நிலையில் இதனை மீண்டும் பல கோடி ரூபாய் செலவில், ஏழு ஆண்டுகளாக, கோவிலை புதுப்பிக்கும் பணி நடந்ததுவந்ததுடன் கோவில் புதுப்பிக்கும் பணி முடிந்ததும் தண்ணீ் அற்று வறண்டுபோய் இருந்த குளத்தில் தானாக தண்ணீர் நிரம்பியதைத் தொடர்ந்து பூஜைகள் ஆரம்பமாகியுள்ளது.

இதுகுறித்து, பாகிஸ்தான், தொல்லியல் துறை தலைவர், அஸ்மத் தாஹிரா இந்தக் கோவில் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டுள்ளது என்பதுடன் இந்த ஆலைய புனரமைப்புக்கு அந்நாட்டில் வசிக்கும் இந்துக்கள் நன்றி கூறினாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதே வேளை இந்த கடாஸ்ராஜ் கோவில் அமைந்துள்ள பகுதி இந்துக்களுக்கு மட்டும் உரியதல்ல என்பதுடன் இங்கு ஒரு பௌத்த மடம் சீக்கிய மாளிகைகள் மற்றும் இதர சிறுபான்மையினரின் வழிபாட்டு மையங்களும் உள்ளதாக அஸ்மத் தாஹிரா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment