7 வயது சிறுமியை மாட்டு தொழுவத்தில் வைத்து பலாத்காரத்திற்கு உட்படுத்திய நபர் கைது!
பொகவந்தலாவை, லெட்சுமி மேற் பிரிவு தோட்டத்தில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புபட்ட 58 வயதுடைய சங்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் சிறுமியை மாட்டு தொழுவத்தில் வைத்து பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment