75 வருட அரசியல் அனுபவம் கொண்ட குடும்பம் எங்கள் குடும்பம்! நாட்டை எவ்வாறு கொண்டுசெல்ல வேண்டும் என எமக்குத் தெரியும்!
இப்படிச் சொல்கிறார் கோத்தபாய ராஜபக்ஷ
ஜனாதிபதி 40 வருட அரசியல் அனுபத்தை கொண்டவர் எனவும், தமது குடும்பம் 75 வருட அரசியல் அனுபவத்தை கொண்ட குடும்பமெனவும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயும் வகையில், மேற்கொண்ட விஜயத்தின் ஒரு பகுதியாக மட்டக்களப்பில் இன்று (23)இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் தலைவர்கள், எமது நாட்டின் போதுமானளவு தலைவர்கள் இருக்கின்றமையினால், நாட்டை கொண்டு செல்வது எவ்வாறு என எமக்கு தெரியும். எமது பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்வது என்பது குறித்தும் எமக்கு தெரியும். எமது நாட்டிற்கு வருகைத் தருகின்ற விதத்தில், நாட்டை எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்து எமக்கு ஆலோசனை வழங்க முயற்சிக்க வேண்டாம். எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க சர்வதேசத்திடம் செல்ல வேண்டிய தேவை இல்லையென குறிப்பிட்ட கோட்டாபய ராஜபக்ஷ, எமது பிரச்சினைகளை மேலும் குழப்பநிலைக்கு கொண்டு செல்வதற்கே சர்வதேசத்தால் முடியுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க தூதுவரினால் எமது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க முடியுமா? அவர் அனைத்து இடங்களுக்கும் செல்கின்றார். அதேபோன்று சிலர் அவரிடத்திற்கு சென்று அனைத்தையும் கூறுகின்றனர். அவர்களினால் என்ன செய்ய முடியும். எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இராஜதந்திரிகள் அவர்களின் பணிகளில் மாத்திரமே ஈடுப்படவேண்டுமெனவும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
0 comments :
Post a Comment