66ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக விழாக் கோலம் பூண்டது கேகாலை நகரம்!
உலகம் முழுவதும் தாய் நாட்டை வெற்றிகொள்ளச் செய்வதற்கு ஒன்றுபடுவோம் என்ற தொனிப் பொருளில் இலங்கையின் 66வது தேசிய சுதந்திர தின நிகழ்வு எதிர் வரும் பெப்ரவரி 4ஆம் திகதி கேகாலையில் வெகு விமரிசையாகக் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார்.
மேலும் கேகாலை மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேசத்துக்கு மகுடம் அபிவிருத்திக் கண்காட்சியை மையமாகக் கொண்டே இம்முறை கேகாலையில் சுதந்திர தின நிகழ்வுகளை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் சுதந்திர தின அணிவகுப்பு மரியாதைகளில் 1400 இராணுவத்தினரும், 250 கடற்படையினரும், 250 விமானப்படையினரும், 250 பொலிஸாரும், 250 சிவில் பாதுகாப்புப் படையினரும், 325 தேசிய பயிலுனர் படையினரும், 300 இளைஞர் படையணியினரும் கலந்து கொள்ளவுள்ளதுடன் 768 பாடசாலை மாணவர்களும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளனர்.
இதனை விட இந்முறை சுதந்திர தின நிகழ்வுக்கு 3000 பேர் விசேட அதிதிகளாக அழைக்கப்பட்டுள்ளதுடன் சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு கேகாலை நகரில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளுக்காக 600 போக்குவரத்துப் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப் படவுள்ளனர் எனக்குறிப்பிட்டார்.
மேலும் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் கொழும்புக்கு வெளியே தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை நடத்துவதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எடுத்த தீர்மானத்தின்படி கடந்த ஆண்டு திருகோணமலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
1 comments :
My country + Kegalle city!
Congatutations for our 66th Indipendanceday!!
Post a Comment