Friday, January 3, 2014

வங்கி ஊழியர் போல் நடித்து கிராமப் பெண்ணிடம் பண மோசடி ; ரூ. 50 ஆயிரம் அபகரிப்பு !!

தனியார் வங்கியின் வெளிக்கள உத்தியோகத்தர் என அறிமு கப்படுத்திய பெண்ணொருவர் கிராமப்புற பெண்ணொருவ ரிடம் வங்கியில் கடனாகப் 10 இலட்சம் ரூபாவை இலகு வாகப் பெறலாம் எனத் தெரிவித்து அப்பெண்ணின் கடன ட்டையை மோசடி செய்து 50 ஆயிரம் ரூபாவை அபகரித்துச் சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கலேவெல பொலி ஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கலேவெல பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வலஸ்வௌ கிராமத்தில் வசிக்கும் சீலவதி என்ற குடும்பப் பெண்ணின் வீட்டிற்குப் 'பைல்'களு டன் சென்ற நடுத்தர வயது பெண்ணொருவர் பிரபல தனியார் வங்கியொன்றின் பெயரைக் குறிப்பிட்டு அவ்வங்கியின் கடன் பிரிவில் வெளிக்களப் பிரிவின் உத்தி யோகத்தரெனத் தன்னை அறிமுகம் செய்துள்ளார்.

மிகவும் குறைந்த வட்டியில் 10 இலட்சம் ரூபா பணத்தை இரண்டே வார காலத்தினுள் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம் என சீலவதிக்கு ஆசைகாட்டி 10 இலட்சம் ரூபா கடனைப் பெறுவதற்கு இணக்கத்தைப் பெற்றுள்ளார். குறித்த தனியார் வங்கியில் கணக்கொன்றை மறுதினமே ஆரம்பித்து 50 ஆயிரம் ரூபாவை வைப்பிலிடுமாறும் பணத்தை மீளப் பெறுவதற்கான 'கடனட்டை' ஒன்றையும் தவறாது பெற்றுக் கொள்ளுமாறும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து கிராமப் பெண் எவ்வாறோ 50,000 ரூபாவை தேடிப் பெற்று வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு விட்டு வங்கி ஊழியர் போல் நடித்த பெண்ணிடம் தகவலை வழங்கியுள்ளார். மறுநாள் விரைந்து வந்த போலி வங்கி ஊழியப் பெண் சீலவதியிடம் இருந்த வங்கி அடையை ஒருவாறாகப் பெற்று சென்று வங்கியி லிருந்த ரூ. 50,000 பணத்தையும் எடுத்துள்ளார். குறித்த வங்கிக்கு சீலவதி கடன் பெறுவதற்காகச் சென்ற போது அவ்வாறானதொரு பெண் ஊழியர் அங்கு வேலை செய்வதில்லை எனத் தெரிய வந்து வாயடைத்துப் போயுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com