ஆரம்பமாகியது 5 ஆவது யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சி!
ஐந்தாவது தடவையாக நடைபெறும் யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று(17.01,2013) வெள்ளிக்கிழமை காலை 10.15 மணிக்கு யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு, வடமாகாண முதலமைச்சர் அலுவலகம், கைத்தொழில் மற்றும் வர்த்தகதுறை அமைச்சு, யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றம், இந்திய துணைத்தூதரகம், யாழ்.மாநகர சபை, இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் என்பன இணைந்து இக்கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தன.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ்.மாவட்ட கிளையின் இந்திய துணைத்தூதுவர் வி.மகாலிங்கம் இலங்கை கண்காட்சி மற்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இக்கண்காட்சியில் கலந்துகொண்டதுடன் இக்கண்காட்சி எதிர்வரும் 19 ஆம் திகதி வரை காலை 10.00 தொடங்கி இரவு 8.00 மணிவரை நடைபெறவுள்ளது.
0 comments :
Post a Comment